வட மத்திய மாகாண அபிவிருத்தித் திட்டங்களை விரிவுபடுத்த JICA மற்றும் மாகாண சபை பேச்சுவார்த்தை - 2026.09.10

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம் (JICA) திட்ட அதிகாரிகளுக்கும் வட மத்திய மாகாண பிரதான செயலாளருக்கும் இடையிலான சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 10, 2026 அன்று பிரதான செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஜைக்கா நிறுவனத்தினால் பிரதேசத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், அத்திட்டங்கள் ஊடாகக் கிடைக்கப்பெற்ற வெற்றிகரமான பலன்களின் அடிப்படையில், அவற்றை வட மத்திய மாகாணம் முழுவதும் மேலும் விஸ்தரிப்பதற்கு வட மத்திய மாகாண சபையின் பங்களிப்பை வழங்குமாறு கோரப்பட்டது. மேலும், இலங்கையில் மாகாண மட்டத்திலே முதன்முறையாகத் தயாரிக்கப்படும் "வட மத்திய மாகாண கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம்" தொடர்பாகவும் இங்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. மாகாணத்தின் கைத்தொழில் துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்குக் குறித்த திட்டம் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக அமையும் என்பதுடன், அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடல் நிகழ்ந்தது.

இக்கூட்டத்தில் பிரதான செயலாளர், பிரதிப் பிரதான செயலாளர் (திட்டமிடல்), மாகாண திட்டமிடல் மற்றும் செயற்பாட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள், ஜைக்கா திட்ட அதிகாரிகள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுசுகி (Suzuki) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Comments are disabled.

ta_INTamil