வட மத்திய மாகாண பிரதான தலைமைச் செயலகம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது
2025/2026 தேசிய உற்பத்தித்திறன் போட்டியின் அரச துறைக்கான சிறப்பு மதிப்பீடுகளின் கீழ், வட மத்திய மாகாண பிரதான தலைமைச் செயலகம் தீவு அளவில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
அரச சேவையின் செயல்திறனை மேம்படுத்துதல், அரச வளங்களை நிர்வகித்தல், புதுமைகளைப் புகுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட அர்ப்பணிப்புக்கு இம்மாண்பு கிடைத்துள்ளது. தேசிய உற்பத்தித்திறன் செயலலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில், பல அரச நிறுவனங்களுக்கு மத்தியில் வட மத்திய மாகாண பிரதான தலைமைச் செயலகம் இந்த குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இதற்கமைய, இன்று பிரதான செயலாளர் அவர்கள் அனைத்து உத்தியோகஸ்தர்களையும் அழைத்து விசேட சந்திப்பொன்றை நடத்தினா். இந்நிகழ்வில், இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காக முழுமையான உத்தியோகஸ்தர் குழாம் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு அவர் தனது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு உத்தியோகஸ்தர்களுக்கு அவர் மேலும் அறிவுறுத்தல் வழங்கினார்.






