“சுபிலிப்பன்ன பாவய” ஓவியக் கண்காட்சி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆரம்பம்

வட மத்திய மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தின் உள்நாட்டு விவகாரப் பிரிவு மூலம் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட "சுபிலிப்பன்ன பாவய" சித்திரப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட திறமைமிக்க சித்திரங்களைக் கொண்ட கண்காட்சி, இன்று (செப்டம்பர் 25) வட மத்திய மாகாண பிரதான செயலாளரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

உலக குழந்தைகள் தின தேசிய வாரத்திற்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் சிறப்புக் கலைக் கண்காட்சியானது, குழந்தைகள் தின தேசிய வாரம் முழுவதுவதும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். பாடசாலை மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர்வதையும் அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சியில் குழந்தைகளின் பல படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

Comments are disabled.

ta_INTamil