தேசிய உற்பத்தித்திறன் விருதுகள்: வட மத்திய மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்திற்கு 3ஆம் இடம்! – 08.11.2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் வட மத்திய மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் 3ஆம் இடத்தைப் பெற்று தேசிய அளவில் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது.இதற்கான விருது வழங்கும் விழா 08.11.2026 காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.இந்நிகழ்வில் வட மத்திய மாகாண பிரதான செயலாளர் திரு. ஜே.எம்.ஆர்.பி. ஜெயசிங்க மற்றும் ஏனைய அதிகாரிகளும் இணைந்து உரிய விருதினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர்.இந்தச் சாதனையானது வட மத்திய மாகாண சபை, பிரதான செயலாளர் அலுவலகம் மற்றும் அதன் அதிகாரிகள் வெளிப்படுத்திய சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும்.

Comments are disabled.

ta_INTamil