வடமத்திய மாகாண ‘திரிய கடன்’ (Diriya Loan) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் – 18.11.2026
வடமத்திய மாகாண பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கூட்டுறவு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘திரிய கடன்’ திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இன்று (18.11.2026) முற்பகல் 09.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், திரிய கடன் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கும் வழிமுறைகள் மற்றும் அதற்காகத் தகுதியான பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான அளவுகோல்கள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, உரிய வங்கி நிறுவனங்களுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்தி இக்கடன் திட்டத்தைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
பிரதம செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், மத்திய அரசாங்கத்தின் கைத்தொழில் அபிவிருத்திப் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் கிளையின் முகாமையாளர், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் கூட்டுறவு அமைச்சின் கணக்காளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.





