பிரதம செயலாளர் அலுவலகத்தின் உற்பத்தித்திறன் வழிநடத்தல் குழுக் கூட்டம் – 17.11.2026
பிரதம செயலாளரின் தலைமையில் 2026 நவம்பர் 17 ஆம் திகதி பிரதம செயலாளரின் உத்தியோகபூர்வ அறையில் விசேட உற்பத்தித்திறன் வழிநடத்தல் குழுக் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவிப் பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், உற்பத்தித்திறன் விடயப் பொறுப்பு உத்தியோகத்தர் உட்பட கணக்கு வட்டம், நிறுவன வட்டம், தொழில்நுட்ப வட்டம் மற்றும் சட்ட வட்டம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது வழிநடத்தல் வட்டங்களின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த பிரதம செயலாளர், உற்பத்தித்திறன் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வட்டங்களினால் வழங்கப்பட்ட பங்களிப்பைப் பாராட்டியதுடன், வட்டக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான அவசியமான ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும், பிரதம செயலாளர் அலுவலகத்தின் கடமைகள் எப்போதும் உயர்ந்த தரத்தில் பேணப்பட வேண்டும் எனவும், ஏனைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்மாதிரியாக அமையும் வகையில் அலுவலக நடத்தைகளும் கடமைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கடமைகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக எதிர்காலத்திலும் வட்டங்களிடமிருந்து புதிய கருத்துக்களும் முன்மொழிவுகளும் எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதம செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.






