வடமத்திய மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஊழியர் கூட்டம் நடைபெற்றது - 03.11.2026
வடமத்திய மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஊழியர் கூட்டம் 2026 நவம்பர் 03 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு அனுராதபுரத்தில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடமத்திய மாகாண பிரதம செயலாளர் திரு. J.M.R.P. ஜெயசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதம செயலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் நிறுவனப் பிரிவு, கணக்குப் பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சட்டப் பிரிவு ஆகியவற்றின் அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 2025/2026 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் போட்டியில் பிரதம செயலாளர் அலுவலகம் மூன்றாம் இடத்தைப் பெற்றமைக்காக, 2026.11.08 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழா குறித்து பிரதம செயலாளர் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் குறித்து வினவிய பிரதம செயலாளர், ஊழியர்கள் அனைவரும் தமது கடமைகளை நிறைவேற்றும்போது வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். கூட்டத்தின் முடிவில் உரையாற்றிய வடமத்திய மாகாண பிரதம செயலாளர் திரு. J.M.R.P. ஜெயசிங்க, மக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் தரமான பொதுச் சேவையை வழங்குவதற்காக ஊழியர்கள் அனைவருக்கும் இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.





