செயலாளர் குழுக் கூட்டம் - 2026/10/07

வட மத்திய மாகாண சபையின் செயலாளர் குழுவின் திட்டமிடப்பட்ட கூட்டம் 2026 அக்டோபர் 07 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள பிரதான செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. வட மத்திய மாகாண பிரதான செயலாளர் திரு. ஜே.எம்.ஆர்.பி. ஜெயசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாகாண சபையின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதிப் பிரதான செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், வட மத்திய மாகாணத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத் திறன், வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட்டு, மாகாணத்தின் ஒட்டுமொத்தக் செயற்திறன் குறித்த விரிவான மதிப்பாய்வு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் இதுவரை எட்டப்பட்டுள்ள பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு, குறித்த திட்டங்கள் திட்டமிடப்பட்டவாறு உரிய காலக்கெடுவுக்குள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது மதிப்பீடு செய்யப்பட்டது. அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதோடு மாத்திரமின்றி, மாகாண நிர்வாகம் தற்போது எதிர்கொள்ளும் செயற்பாட்டு மற்றும் நடைமுறைச் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வளங்களின் வரம்புகள் உள்ளிட்ட தற்போதைய தடைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மூலோபாயப் பரிந்துரைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் கருத்துத் தெரிவித்த வட மத்திய மாகாண பிரதான செயலாளர் திரு. ஜே.எம்.ஆர்.பி. ஜெயசிங்க அவர்கள், எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய முன்னுரிமைப் பகுதிகளை வலியுறுத்தியதுடன், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக அனைத்து நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் இடையில் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் பேணிச் செல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

Comments are disabled.

ta_INTamil