தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 247 நிறுவனங்கள் கௌரவிப்பு! – 2026.10.27

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட மெச்சுரை மற்றும் மெச்சுரை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 247 நிறுவனங்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 27.10.2026 கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 2025/2026ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, நாடு முழுவதிலுமிருந்து 6,600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 2,800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. முதற்கட்டத் தெரிவின் பின்னர், 2,056 நிறுவனங்கள் களவிஜயம் ஊடாக நேரடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவ்வாய்வுகளின் அடிப்படையில், 1,669 நிறுவனங்கள் விருதுகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்டன.

தேசிய ரீதியில், ஆறு நிறுவனங்கள் தங்க விருதையும், 12 நிறுவனங்கள் முதலாமிடத்தையும், 99 நிறுவனங்கள் இரண்டாமிடத்தையும், 331 நிறுவனங்கள் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்றன. மேலும், 568 நிறுவனங்கள் விசேட மெச்சுரை விருதையும் (Special Commendation), 653 நிறுவனங்கள் மெச்சுரை விருதையும் (Commendation) பெற்றுக்கொள்ளத் தகுதிபெற்றன.

இந் நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Comments are disabled.

ta_INTamil